ADDED : நவ 27, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில், சேகரமாகும் குப்பை, புஷ்பகிரி சாலையோரம், பேரூராட்சியினரால், மலைப்போல கொட்டி குவிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக், இறைச்சி, காய்கறி கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த குப்பையில் உணவு தேடி, மாடு, நாய், பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மலைபோல குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.