/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டட கழிவால் துார்ந்த மண்ணுார் குட்டை
/
கட்டட கழிவால் துார்ந்த மண்ணுார் குட்டை
ADDED : மார் 21, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மண்ணுார் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள அகத்திஸ்வரர் கோவில் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான குட்டை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், இக் குட்டை அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது.
தற்போது, குட்டை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அருகில் உள்ள கோவில் கட்டுமான பணியின் கட்டட கழிவை, குட்டையில் கொட்டியுள்ளனர். இதனால், குட்டை துார்ந்த நிலையில் உள்ளது.
எனவே, குட்டையை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.