/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலையோரம் சரிந்து விழுந்துள்ள கட்சி விளம்பர பேனரால் விபத்து அபாயம்
/
நெடுஞ்சாலையோரம் சரிந்து விழுந்துள்ள கட்சி விளம்பர பேனரால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையோரம் சரிந்து விழுந்துள்ள கட்சி விளம்பர பேனரால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையோரம் சரிந்து விழுந்துள்ள கட்சி விளம்பர பேனரால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 19, 2025 12:55 AM

ஸ்ரீபெரும்புதுார்:தேசிய நெடுஞ்சாலையோரம், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிறுத்தம் அருகே, காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர், சாலையில் சரிந்து விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுங்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி நினைவகம் அருகே, பேருந்து நிறுத்தம் உள்ளது. காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
இந்த பேருந்து நிறுத்தம் அருகே, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் சார்பில், சாலையோரம் ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விளம்பர பேனர் சாலையோரம் சரிந்து விழுந்தது. இதனால், முக்கிய சந்திப்பு பகுதியான அப்பகுதியில், செல்லும் வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், அச்சந்திப்பில் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மேலும், சாலையோரம் விழுந்துள்ள விளம்பர பேனரால், பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் நடக்க இடமின்றி, நெடுஞ்சாலையில் சென்று வருவதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையோரம் விழுந்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பேனரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.