/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
/
சாலை விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
சாலை விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
சாலை விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
ADDED : ஜூன் 18, 2025 06:50 PM
உத்திரமேரூர்:பழையசீவரம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. இவர், தன்னுடைய உறவினர் சாந்தி பூஷன், 40, என்பவருடன், கடந்த 9ல், இருசக்கர வாகனத்தில் சோளிங்கர் கோவிலுக்கு சென்றார்.
அப்போது, பழையசீவரம் பகுதியில் சென்றபோது, சாலையில் குறுக்கே வந்த நாய் மீது மோதி, இருசக்கரம் வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிய ரமேஷ் பலத்த காயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று, காலை 6:00 மணியளவில் ரமேஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து, சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.