/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் வளர்ந்துள்ள செடி மழைநீர் செல்வதில் சிக்கல்
/
கால்வாயில் வளர்ந்துள்ள செடி மழைநீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் வளர்ந்துள்ள செடி மழைநீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் வளர்ந்துள்ள செடி மழைநீர் செல்வதில் சிக்கல்
ADDED : மே 30, 2025 10:39 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, குண்ணம் ஊராட்சி ரைஸ்மில் தெருவில் மழைநீர் செல்லும் வாடிகால்வாய் உள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி வளர்ந்து, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாத நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலங்களில் கால்வாயில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே ரைஸ்மில் தெருவில் உள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, குண்ணம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பஞ்சுபேட்டையில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணை விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
இதனால், பலத்த மழை பெய்தால் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியையும், விவசாய நிலத்தையும் சூழும் நிலை உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள், செடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க கருப்படிதட்டடை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.