sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இ - சேவை மைய சுவரில் வளர்ந்துள்ள செடியால் உறுதிதன்மை கேள்விக்குறி

/

இ - சேவை மைய சுவரில் வளர்ந்துள்ள செடியால் உறுதிதன்மை கேள்விக்குறி

இ - சேவை மைய சுவரில் வளர்ந்துள்ள செடியால் உறுதிதன்மை கேள்விக்குறி

இ - சேவை மைய சுவரில் வளர்ந்துள்ள செடியால் உறுதிதன்மை கேள்விக்குறி


ADDED : ஜூலை 17, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, அரசு இ- - சேவை மைய கட்டடத்தின் மீது வளர்ந்துள்ள, அரச செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகம் வளாகத்தில், அரசு இ - -சேவை மையம் செயல்பட்டு வருகிறது. ஜாதி, வருமானம், இருப்பிடம், ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்க்கை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் என, வருவாய் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கு, நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்த இ- - சேவை மைய கட்டடம் பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் கூரை மற்றும் பக்கவாட்டு சுவரில் அரச செடிகள் வளர்ந்து உள்ளன.

இதனால், கான்கிரீட் சுவரில் அரச செடியின் வேர்கள் படர்ந்து, கட்டடம் உறுதிதன்மை இழந்து, சேதமாகும் நிலை உள்ளது.

எனவே, அரசு இ- - சேவை மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us