/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எடையார்பாக்கத்தில் மின்விளக்கு இல்லாத கம்பம்
/
எடையார்பாக்கத்தில் மின்விளக்கு இல்லாத கம்பம்
ADDED : ஜன 30, 2024 03:43 AM

மதுரமங்கலம் : மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, மேலேரி, சிங்கில்பாடி, மதுரமங்கலம் வழியாக ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் இணையதள வசதிக்கு, ஐந்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மின் கம்பங்களில், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்கள் இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது, இருளில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, எடையார்பாக்கம் கிராமத்தில் இருந்து, மேலேரி, கண்ணன்தாங்கல் கூட்டு சாலை வரையில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி, தெரு விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.