/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துலங்கும் தண்டலத்தில் புதர் மண்டி கிடக்கும் குளம்
/
துலங்கும் தண்டலத்தில் புதர் மண்டி கிடக்கும் குளம்
ADDED : நவ 11, 2024 02:47 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஆரியபெரும்பாக்கம் ஊராட்சியில், துலங்கும் தண்டலம் துணை கிராமம் உள்ளது. இங்கு, கங்கையம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும், 2022 - 23ம் நிதி ஆண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. மேலும், படிக்கெட்டுகள் உருவாக்கி சுத்தப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த குளத்தை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பு செய்யாததால், பார்த்தீனியம் செடிகள் புதர் மண்டிக் காணப்படுகின்றன இதுதவிர, குளம் முழுதும் சுற்றிலும் பாசி படர்ந்து தண்ணீரின் நிறமே மாறி உள்ளது.
எனவே, துலங்கும் தண்டலம் கிராமத்தில், குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்றி, பாசியை துார்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.