/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயணியர் நிழற்கூரை இடத்தில் ஆளுங்கட்சியினர் கொடி கம்பம்?
/
பயணியர் நிழற்கூரை இடத்தில் ஆளுங்கட்சியினர் கொடி கம்பம்?
பயணியர் நிழற்கூரை இடத்தில் ஆளுங்கட்சியினர் கொடி கம்பம்?
பயணியர் நிழற்கூரை இடத்தில் ஆளுங்கட்சியினர் கொடி கம்பம்?
ADDED : ஜன 23, 2025 07:24 PM
காஞ்சிபுரம்:பயணியர் நிழற்கூரை கட்டடத்திற்கு எதிராக, ஆளுங்கட்சி கொடி கம்பம் அமைக்க, ஒன்றிய கவுன்சிலர், கல்வெட்டு கட்டும் பணி செய்து, இடையூறு ஏற்படுத்தி வருகிறார் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டரிடம், வாரணவாசி ஊராட்சி தலைவர் பிரேமா அளித்த மனுவில் கூறியதாவது:
வாரணவாசி ஊராட்சி புல எண்-: 182ல் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்கூரை கட்டடம் அமைக்க, உத்திரமேரூர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றிய குழு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கட்டுமான பணி ஒப்பந்தம் எடுத்தவர், தற்போது வரை கட்டுமான பணிகளை துவக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய்காந்தி, ஆளுங்கட்சி கொடி கம்பத்துடன் கூடிய, கல்வெட்டு கட்டி வருகிறார்.
இதனால், பயணியருக்கு நிழற்கூரை கட்டடம் கட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது. மேலும், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுத்து, பயணியர் நிழற்கூரை கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

