/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜேஷ்டா தேவி சிலைக்கு தனி கோவில்
/
ஜேஷ்டா தேவி சிலைக்கு தனி கோவில்
ADDED : மே 20, 2025 01:08 AM
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், ஊத்துக்காடு சிவன் கோவில் வளாகத்தில், மூத்ததேவி சிலை கண்டெடுக்கப்பட்டது.
இந்த பழமை வாய்ந்த சிலைகள் போதிய பாராமரிப்பு இன்றி இருப்பதாக, தொல்லியல் துறையினர் எடுத்து பாதுகாக்க வேண்டும் என, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கோரிக்கை விடுத்திருந்தார்.
பராமரிப்பு இல்லாத சிவன் கோவில் மற்றும் மூத்ததேவி என, அழைக்கப்படும் ஜேஷ்டா தேவி சிலைக்கு தனித்தனி கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
சிவன் கோவிலுக்கு, காமாட்சி சமேத பொற்பந்தீஸ்வரர் மற்றும் ஜேஷ்டா தேவி கோவிலுக்கு அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது:
மரபு நடை பயணத்தில் வரலாற்று எச்சங்களை தேடி பயணம் செய்கிறோம். ஒவ்வொரு தேடல் பயணத்தில் புதுவிதமான அரிய வகையான சிலைகளை கண்டெடுக்கிறோம்.
இதை மீட்டு தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கிறோம். அனைத்து சிலைகளையும் தொல்லியல் துறையினர் பாதுகாக்க முடியாத சூழல் உள்ளது.
இருப்பினும், ஒரு சில பழைமை வாய்ந்த கோவில்களை கிராமத்தினரே கட்டி வணக்க துவங்கியுள்ளனர். இதில், ஊத்துக்காடு கிராமத்தினர் முன் மாதிரியாக துவக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு கிராமத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு அரிய வகை சிலைகளை கோவிலாக பாதுகாத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.