/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணி முடிந்தும் திறக்கப்படாமல் வீணாகும் கழிப்பறை கட்டடம்
/
பணி முடிந்தும் திறக்கப்படாமல் வீணாகும் கழிப்பறை கட்டடம்
பணி முடிந்தும் திறக்கப்படாமல் வீணாகும் கழிப்பறை கட்டடம்
பணி முடிந்தும் திறக்கப்படாமல் வீணாகும் கழிப்பறை கட்டடம்
ADDED : ஜன 27, 2025 11:42 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்காக சன்னிதி தெருவில், 2021 - 22ம் நிதியாண்டில் நகர்ப்புறம் மற்றும் துாய்மை இந்தியா திட்டம் 2.0 சார்பில், 36.28 லட்சம் ரூபாயில் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
கழிப்பறை கட்டுமான பணி இரு மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்டது. இருப்பினும், திறப்பு விழா நடத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
இதனால், கைலாசநாதர் கோவில், அநேகதங்காவதேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.
மேலும், கழிப்பறையும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, கைலாசநாதர் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.