/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - வீலரில் சென்றவர் கார் மோதி பலி
/
டூ - வீலரில் சென்றவர் கார் மோதி பலி
ADDED : பிப் 21, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42, லாரி டிரைவர். இவர், 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், கூரம் பெட்ரோல் பங்கில் அருகே, நேற்று, பிற்பகல், 3:30 மணி அளவில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அரக்கோணத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற, 'இனோவா கிறிஸ்டா' கார், மணிகண்டன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் தாலுகா போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.