/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கம்பி கட்டும் தொழிலாளி தவறி விழுந்து பலி
/
கம்பி கட்டும் தொழிலாளி தவறி விழுந்து பலி
ADDED : நவ 09, 2024 10:11 PM
ஸ்ரீபெரும்புதுார்:கீழ்படப்பை, திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன், 55; சென்ட்ரிங் ஊழியர். கடந்த அக்., 22ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார் அருகே, கடுவஞ்சேரி பகுதியில் புதியதாக கட்டிவரும் வீட்டிற்கு தளம் போடுவதற்காக, முதல் மாடியில் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, நிலை தடுமாறி முதல் தளத்தில் இருந்து விழுந்தார். இதில், அவருக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, நேற்று முன்தினம் இரவு, அவர் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.