/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'இன்டர்வியூ'க்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி
/
'இன்டர்வியூ'க்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி
ADDED : மார் 20, 2025 12:03 AM
ஸ்ரீபெரும்புதுார்:வாலாஜாபாத் அருகே, நத்தாநல்லுார் கிராமம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூபதி, 29. நேற்று காலை, 'யமாஹா எப்.இஜெட்.,' பைக்கில், ஒரகடம் அருகே, எழிச்சூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இன்டர்வியூக்கு சென்றார். பின், மாலை வீட்டிற்கு திருப்பினார்.
எழிச்சூர் -பண்ருட்டி கண்டிகை சாலையில், மதுவந்தாங்கல் அருகே வந்த போது, 'பல்சர்' வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த பூபதி, சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். 'பல்சர்' பைக்கில் வந்த, பனையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு இரண்டு கால் மற்றும் வலது கை முறிந்தது.
அவ்வழியாக வந்தவர்கள் ராமலிங்கத்தை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஒரகடம் போலீசார் பூபதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.