/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜேப்படி செய்தபோது கையும் களவுமாக பிடிபட்ட இளைஞர்
/
ஜேப்படி செய்தபோது கையும் களவுமாக பிடிபட்ட இளைஞர்
ADDED : பிப் 05, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர், காஞ்சிபுரத்தில் சிம்கார்டு முகவராக உள்ளார். இந்நிலையில், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று முன்தினம் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, இவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்து, 300 ரூபாய் பணத்தை, காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த சந்துரு, 19, என்பவர் திருடியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் சந்துருவை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விஷ்ணுகாஞ்சி போலீசில் சந்துரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

