/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் அடைப்பை சரி செய்ய தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்
/
வடிகால்வாய் அடைப்பை சரி செய்ய தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்
வடிகால்வாய் அடைப்பை சரி செய்ய தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்
வடிகால்வாய் அடைப்பை சரி செய்ய தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : செப் 09, 2025 12:54 AM

உத்திரமேரூர், உத்திரமேரூரில் சாலையோரத்தில் வடிகால்வாய் அடைப்பை சரி செய்ய தோண்டிய பள்ளம், இன்னும் மூடப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சி, ஏழாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கம் பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை ஒட்டி செல்லும் சாலையோரத்தில், வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த வடிகால்வாயில் செல்லும் கழிவுநீர், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலமாக, அங்குள்ள சாலையை கடந்து எதிரே உள்ள கால்வாயில் கலக்கிறது.
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் பள்ளியையொட்டி உள்ள வடிகால்வாயில், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது.
வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகத்தினர் பள்ளம் தோண்டினர். ஆனால், தோண்டிய பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையிலே உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பள்ளிக்கு வரும் சிறுவர்களும், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த பள்ளத்தை மூட பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.