/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தார்ப்பாய் மூடாமல் சென்ற லாரிகளால் பாலத்தில் சிதறியுள்ள ஜல்லியால் விபத்து அபாயம்

ADDED : மே 02, 2025 01:03 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வெங்கச்சேரி கிராமத்தில், செய்யாற்றின் மீது, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த பாலத்தின் வழியே தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பட்டா, அருங்குன்றம், சிறுதாமூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் கல் குவாரிகள், கிரஷர்களில் இயக்கப்படும் லாரிகளும் இந்த பாலத்தின் வழியே செல்கின்றன.
அவ்வாறு செல்லும் லாரிகள் எம்.சான்ட், ஜல்லிகள் ஆகியவை ஏற்றிச் செல்லும்போது தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன. அப்போது, பாலத்தின் மீது லாரிகள் செல்லும்போது ஜல்லி, எம்.சான்ட் ஆகியவை விழுந்து சிதறுகின்றன.
அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சிதறி கிடக்கும் ஜல்லிகளில் சிக்கி, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாயால் மூடி செல்ல நடவடிக்கை எடுக்குமாறு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.