/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் சாலையோரம் நிறுத்தும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : மே 12, 2025 11:15 PM

ஸ்ரீபெரும்புதுார், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் - வடகால் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மூலப்பெருட்கள் ஏற்றிக்கொண்டு நாள்தோறும் பல ஆயிரகணக்கான கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம் மாத்துார், வல்லக்கோட்டை, வல்லம், தெரேசாபுரம் பகுதிகளில் இயங்கிவரும் உணவங்களுக்கு வரும் கனரக வாகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களை பிரதான நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்ட செல்கின்றனர்.
இதனால், சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், 'பீக் ஹவர்' மற்றும் இரவு நேங்களில், இவ்வழியாக வரும் வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகளில் மோதி, அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைகளின் ஓரம் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுதுள்ளனர்.