/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்
/
தடுப்பு இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்
ADDED : நவ 03, 2025 10:55 PM

உத்திரமேரூர்:  உத்திரமேரூரில், தடுப்புகள் இல்லாத சிறுபாலத்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலையில் இருந்து சின்னநாரசம்பேட்டை சாலை பிரியும் இடத்தில், ஆபத்தான சாலை வளைவு உள்ளது. இந்த சாலை வளைவு பகுதியில் செல்லும் கால்வாய் மீது, சிறுபாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதன் மீது இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
அப்பகுதியில், சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே, உத்திரமேரூரில் ஆபத்தான சாலை வளைவில் உள்ள, சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

