/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை வளைவில் விபத்து எச்சரிக்கை பலகை அவசியம்
/
சாலை வளைவில் விபத்து எச்சரிக்கை பலகை அவசியம்
ADDED : டிச 05, 2024 01:53 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் கலியாம்பூண்டி- - பெரு நகர் சாலை உள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி ராவத்தநல்லுார், இளநகர், அனுமந்தண்டலம் உள்ளிட்ட கிராமத்தினர் வந்தவாசி, உத்திர மேரூர், காஞ்சிபுரம், செய்யாறு உள்ளிட்ட பகுதி களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெரு நகர் கிராமத்தில் செல்லும் சாலையில் உள்ள மூன்று இடங்களில், ஆபத்தான வளைவுகள் உள்ளது. இங்கு, எச்சரிக்கை குறியீடு பதாகை இல்லாமலும்,வேகத்தடைகளுக்குவர்ணம் பூசாமலும்உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இந்த வளைவு பகுதியில் எச்சரிக்கை பதாகை அமைக்குமாறு, பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஆபத்தான சாலை வளைவுகளில் எச்சரிக்கை பதாகை அமைக்க வேண்டும். வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் என, வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.