/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி அருகே சாணம் குவிப்பு விஷாரில் சுகாதார சீர்கேடு
/
பள்ளி அருகே சாணம் குவிப்பு விஷாரில் சுகாதார சீர்கேடு
பள்ளி அருகே சாணம் குவிப்பு விஷாரில் சுகாதார சீர்கேடு
பள்ளி அருகே சாணம் குவிப்பு விஷாரில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 11, 2025 11:21 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் விஷார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியில். அப்பகுதியில் வசிப்போர் மாட்டுச்சாணம் கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் சாணம் குவியலாக உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மாட்டு சாணத்தில் உருவாகும் புழு, பூச்சி, வண்டுகள் பள்ளிக்குள் செல்லும் அபாயம் உள்ளதால், மாணவ- - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
எனவே, விஷாரில் அரசு பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள மாட்டு சாண குவியலை அகற்ற, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

