/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ரோடு ராஜா' புகார்கள் மீது நடவடிக்கை
/
'ரோடு ராஜா' புகார்கள் மீது நடவடிக்கை
ADDED : பிப் 23, 2024 01:17 AM
சென்னை, போக்குவரத்து போலீசாரின் இணையதளப் பக்கத்தில், பொதுமக்கள் பதிவு செய்த, 11,806 புகார்களில், 10,790 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:
காவல் துறையின் இணையதளப் பக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வரை, 11,806 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 10,790 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரத்தையும் புகார்தாரருக்கு தெரிவிக்கிறோம். மீதமுள்ள புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் துவங்கப்பட்ட 'நீங்க ரோடு ராஜாவா' என்ற திட்டத்தின் கீழ், 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 92 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 55 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.