/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
/
ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : ஜன 30, 2025 11:43 PM
சென்னை, வாகன சோதனையின்போது, அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையாறு போக்குவரத்து எஸ்.ஐ., மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2028 ஆக., 4ல், சென்னை அடையார் திரு.வி.க., பாலம் அருகே, போக்குவரத்து எஸ்.ஐ., விஜயரங்கன் உள்ளிட்ட போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணியாமல் வந்த, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
மது போதையில் இருந்ததாக கூறி, இருசக்கர வாகனத்தின் சாவியை பறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன், அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். உடன் வந்த சுரேஷ், ராதாகிருஷ்ணனை காப்பாற்றுமாறு, எஸ்.ஐ., விஜயரங்கனிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை காப்பாற்றாமல், 'அவன் விதி முடிஞ்சது' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்குப் பின், அடையாறு ஆற்றில் ராதாகிருஷ்ணன் உடல் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக, ராதாகிருஷ்ணின் தாய் ரேவதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
உயிரிழந்த ராதாகிருஷ்ணன், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை. ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய நபரை காப்பாற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறல்.
எனவே, எஸ்.ஐ., விஜயரங்கன் மீது, தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனை இழந்த ரேவதிக்கு, தமிழக அரசு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.