sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விதிமீறி கனிமம் ஏற்றி சென்ற 518 லாரிகள் மீது நடவடிக்கை

/

விதிமீறி கனிமம் ஏற்றி சென்ற 518 லாரிகள் மீது நடவடிக்கை

விதிமீறி கனிமம் ஏற்றி சென்ற 518 லாரிகள் மீது நடவடிக்கை

விதிமீறி கனிமம் ஏற்றி சென்ற 518 லாரிகள் மீது நடவடிக்கை


ADDED : டிச 05, 2024 02:12 AM

Google News

ADDED : டிச 05, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள கனிமம் குத்தகை விபரங்கள் அனைத்தும் http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.

மேலும், கனிம குவாரி குத்தகைதாரர்களும், இந்த இணையதளத்தில் பதிவு செய்து, இணையம் வாயிலாக உரிய கட்டணங்கள் செலுத்தி, அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யும் நடைமுறை, கடந்த மே 9 முதல் காஞ்சிபுரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சடிக்கப்பட்ட நடைச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, இணையதளம் வாயிலாக அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நடைச்சீட்டுகளை கனிமவளத்துறையின் மூலம், விரைவில் முழுமையாக செயல்படுத்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கனிம கடத்தல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், தார்ப்பாய் மூடாமல் செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, காஞ்சி புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்களுடன், ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர், பலமுறை கலந்தாய்வுகூட்டங்கள் நடத்தி உரிய அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

மேலும், 2024 - 2025ம் ஆண்டில் உரிய அனுமதியின்றி கனிமம் ஏற்றிச் சென்ற, 55 வாகனங்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச் சென்ற, 518 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கங்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, விதிகளை முழுமையாக பின்பற்றி உரிய முறையில் கனிமங்கள் கொண்டு செல்ல வேண்டும்.

தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us