/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோடைக்கால நோய்கள் வராமல் இருக்க நடவடிக்கை: கமிஷனர் ராதாகிருஷ்ணன்
/
கோடைக்கால நோய்கள் வராமல் இருக்க நடவடிக்கை: கமிஷனர் ராதாகிருஷ்ணன்
கோடைக்கால நோய்கள் வராமல் இருக்க நடவடிக்கை: கமிஷனர் ராதாகிருஷ்ணன்
கோடைக்கால நோய்கள் வராமல் இருக்க நடவடிக்கை: கமிஷனர் ராதாகிருஷ்ணன்
ADDED : பிப் 19, 2024 10:45 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நேற்று வந்தார். காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமும், சங்கரமடம் மேலாளருமான சுந்தரேச அய்யர் வரவேற்றார்.
சுவாமி தரிசனம் செய்தபின் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தாண்டு இதுவரைக்கும் சென்னையில் தண்ணீர் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. மழை பெய்ததால், நிலத்தடி நீரும் நல்லமுறையில் உள்ளது.
கோடைக்கால நோய்கள் வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை மாநகராட்சிக்கு மூன்று சவால்கள் உள்ளன. ஒன்று, மழைநீர் வடிய, நான்கு வடிகால்கள் தான் உள்ளன. பல கால்வாய்கள் இருந்தாலும், ஆந்திரா, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்து, 5,119 கி.மீ., துாரத்திலிருந்து மழைநீர் வருகிறது. பல்வேறு முயற்சிகள் வாயிலாக இவற்றை தீர்க்கிறோம்.
இரண்டாவதாக, பார்த்தசாரதி கோவில் அருகே உள்ளிட்ட பல பகுதியில் காலம் காலமாக மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
எனவே, மாடுகளை பொறுத்தவரையில், மண்டலத்திற்கு மாடு கட்டி வைக்கும் வகையில் 15 மண்டலத்திற்கும் 15 பவுண்டுகள் அமைப்பது. மூன்றாவது சவாலாக, தெரு நாய்கள் பிரச்னை உள்ளது. தெரு நாய்களுக்கு கருத்தடை தான் தீர்வு என்பதால், அதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
கடந்தாண்டு நாங்கள் 20,000 நாய்களை பிடித்தோம். மாடுகளை பிடித்து, 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்து, பிறகு அவற்றை விடுவிக்கிறோம்.
நாள் ஒன்றுக்கு சென்னையில், 6,000 டன் குப்பை சேருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

