/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லம் சுகாதார நிலையத்திற்கு ரூ.25 லட்சத்தில் கூடுதல் கட்டடம்
/
வல்லம் சுகாதார நிலையத்திற்கு ரூ.25 லட்சத்தில் கூடுதல் கட்டடம்
வல்லம் சுகாதார நிலையத்திற்கு ரூ.25 லட்சத்தில் கூடுதல் கட்டடம்
வல்லம் சுகாதார நிலையத்திற்கு ரூ.25 லட்சத்தில் கூடுதல் கட்டடம்
ADDED : செப் 24, 2025 10:22 PM
ஸ்ரீபெரும்புதுார்:வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்கேன் அறை, பெண் நோயாளிகள் வார்டு, மருத்துவர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் இட நெருக்கடியில் அவதி அடைந்து வந்தனர். இதனால், கூடுதல் கட்டடங்கள் கட்ட வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தனியார் தொழிற்சாலை பங்களிப்பில், சி.எஸ்.ஆர்., எனும் தனியார் சமூக பொறுப்பு நிதியின் கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
உள் நோயாளிகள் பெண்கள் வார்டு, மருத்துவர் அறை, ஸ்கேன் அறை, தடுப்பூசி பதப்படுத்தும் அறை, மருந்தக சேமிப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டடம், இரண்டு மாதங்களில் பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.