/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எழிச்சூருக்கு கூடுதல் பேருந்து கோரிக்கை
/
எழிச்சூருக்கு கூடுதல் பேருந்து கோரிக்கை
ADDED : ஜன 24, 2023 09:50 AM
ஸ்ரீபெரும்புதுார், எழிச்சூர் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் ஒரகடம் அருகே எழிச்சூர் ஊராட்சி உள்ளது. இங்கு 4500 பேர் வசிக்கிறனர். தனியார் தொழிற்சாலைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு நடுநிலைப் பள்ளி, பழமை வாய்ந்த நல்லிணக்கேஸ்வரர் கோவில் ஆகியவை எழிச்சூரில் உள்ளன.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை மற்றும் பிரசவம் பார்க்க வடக்குப்பட்டு, சென்னாகுப்பம், வலையகரணை உள்ளிட்ட சுற்றுபுறத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எழிச்சூர் செல்கின்றனர்.
தாம்பரத்தில் இருந்து எழிச்சூர் பகுதிக்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பேருந்து மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டும் எழுச்சூர் வந்து செல்கிறது.
இதனால், பேருந்துக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி எழிச்சூருக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.