/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாவலுார் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை திறப்பு
/
நாவலுார் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை திறப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:11 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் குடியிருப்பு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், போதிய வகுப்பறை வசதி இல்லாததால், மாணவ - மாணவியர் சிரமமடைந்து வந்தனர்.
இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியின் கீழ், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக, ஐந்து வகுப்பறை, ஆசிரியர் அறை, இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன.
இதை, சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், ஸ்ரீபெரும்புதுார் காங்., எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை உட்பட பலர் பங்கேற்றனர்.