/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு உத்திரமேரூரில் கூடுதல் மின்மாற்றி
/
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு உத்திரமேரூரில் கூடுதல் மின்மாற்றி
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு உத்திரமேரூரில் கூடுதல் மின்மாற்றி
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு உத்திரமேரூரில் கூடுதல் மின்மாற்றி
ADDED : அக் 04, 2025 12:56 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்கும் வகையில், எல்.எண்டத்தூர் சாலையில் கூடுதலாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, எல்.எண்டத்துார் சாலையில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, சாலையோர கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் மூலமாக, குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல, அருகிலுள்ள விவசாய பம்ப் செட்டுகளுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இங்குள்ள, மின்மாற்றியிலிருந்து வழங்கப்படும் மின்சாரம் போதியளவு இல்லாததால், அடிக்கடி குறைந்த மின்னழுத்த மின்வினியோக பிரச்னை இருந்து வந்தது.
இதனால், அப்பகுதியில் மின்சாதன பொருட்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க, கூடுதலாக மின்மாற்றி அமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, உத்திரமேரூர் மின்வாரியத் துறையின் மூலமாக, பாசன கால்வாய் பாலத்தின் அருகே, புதிய மின்மாற்றி கூடுதலாக அமைக்கப்பட்டது.