/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அ.தி.மு.க.,வில் கூடுதல் ஒன்றியம் பிரிப்பு
/
உத்திரமேரூர் அ.தி.மு.க.,வில் கூடுதல் ஒன்றியம் பிரிப்பு
உத்திரமேரூர் அ.தி.மு.க.,வில் கூடுதல் ஒன்றியம் பிரிப்பு
உத்திரமேரூர் அ.தி.மு.க.,வில் கூடுதல் ஒன்றியம் பிரிப்பு
ADDED : பிப் 15, 2024 09:55 PM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஒன்றியமான உத்திரமேரூரில், 73 ஊராட்சிகள் மற்றும் 22 கவுன்சிலர் வார்டுகள் உள்ளடங்கி உள்ளன.
உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க.வில், ஏற்கனவே உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம் என மூன்று ஒன்றியங்கள் ஏற்படுத்தப்பட்டு கட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், கட்சி நிர்வாக வசதிக்காக, உத்திரமேரூரில் கூடுதல் ஒன்றியம் ஏற்படுத்த அ.தி.மு.க.,வின் மாவட்ட தலைமை தீர்மானித்தது.
அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம், பொற்பந்தல், கட்டியாம்பந்தல், திருவானைக்கோவில், ஒரக்காட்டுபேட்டை ஆகிய ஐந்து கவுன்சிலர் வார்டுகளை உள்ளடக்கிய 19 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., என பிரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒன்றியத்திற்கு செயலராக திருவந்தார் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., ஒன்றிய செயலர் அறிமுகம் மற்றும் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சாலவாக்கத்தில் நடந்தது.
அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சோமசுந்தரம் மற்றும் உத்திரமேரூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.