/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 14ல் அதிகார நந்தி சேவை உத்சவம்
/
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 14ல் அதிகார நந்தி சேவை உத்சவம்
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 14ல் அதிகார நந்தி சேவை உத்சவம்
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 14ல் அதிகார நந்தி சேவை உத்சவம்
ADDED : ஏப் 05, 2025 10:02 PM
பெருநகர்:உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் கிராமத்தில், பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், 2020ம் ஆண்டு, 3 லட்சம் ரூபாய் செலவில், அத்தி மரத்தில், அதிகார நந்தி வாகனம் செய்யப்பட்டு, சுவாமி வீதியுலா செல்வதற்காக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிகார நந்தி சேவை உற்சவம் நடக்கிறது. அதன்படி, ஐந்தாம் ஆண்டு உத்சவ விழா 14ல் நடைபெறுகிறது. இதில், அதிகாலை 3:30 மணிக்கு மூலவருக்கும், 3:00 மணிக்கு உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு மஹா தீபாராதனையும், உள்புறப்பாடும் நடக்கிறது.
காலை 8:00 மணிக்கு ராஜகோபுர வாசலில் பிரம்மபுரீஸ்வரர் அதிகார நந்தி சேவை அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 500 சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியங்கள் இசைக்க, ஆரணி, சிவ நடனம், சக்தி நடனம், சிலம்பாட்டத்துடன் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதியுலா வருகிறார்.
இதில், குடை உற்சவம், திருப்பத்துார் சிவனடியார்கள் பன்னிரு திருமுறை பெட்டக திருவீதியுலா, புலி ஆட்டம், சேவை ஆட்டம், கட்டை கூத்து, பரதநாட்டிய நிகழ்ச்சி, ராஜமேளம், தப்செட் இசை நிகழ்ச்சியும், 1,000 பக்தர்களுக்கு ருத்ராட்சமும் அணிவிக்கப்பட உள்ளது.
விழாவிற்கு தலைமை வகிக்கும், ஈரோடு மாவட்டம், கோபி, திருஞான சம்பந்தர் திருமுறை மடம், வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், மாலை 6:30 மணிக்கு திருவாசக அருளாசியுரை வழங்குகிறார்.