/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்
/
அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்
அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்
அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்
ADDED : மார் 11, 2024 04:44 AM
காஞ்சிபுரம், : லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டும், பலருக்கும் புதிய பதவிகளை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வழங்கியுள்ளார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவில், மாவட்ட தலைவராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரூபேந்திரகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். செயலராக கெளதம் என்பவரும், பொருளாளராக ராஜேஷ் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், துணைத் தலைவர்கள் நான்கு பேரும், இணை செயலர்கள் ஐந்து பேரும், துணை செயலர்கள் ஆறு பேரை நியமித்து, பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவினர், லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளில், சமூக வலைதளங்களில் தீவிரமாக பணியாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

