ADDED : மார் 05, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காவலன்கேட் அருகே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்சோமசுந்தரம் தலைமையில், அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இது தொடர்புடைய கும்பலை, போலீசார் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

