/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பங்களில் விளம்பர பதாகை சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்

ADDED : மே 30, 2025 10:41 PM

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை நடுவே உள்ள மின்கம்பங்களில், தனியார் வீட்டுமனை விற்பனை குறித்தான விளம்பர பதாகைகள் வரிசையாக கட்டப்பட்டள்ளன.
அவை காற்று வேகமாக வீசும்போது, வாகன ஓட்டிகளின் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தவிர, சாலை நடுவே கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால், கவனச்சிதறல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சாலை நடுவே மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள, விளம்பர பதாகைகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.