/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பராமரிக்க வேண்டிய அறிவுரை
/
பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பராமரிக்க வேண்டிய அறிவுரை
பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பராமரிக்க வேண்டிய அறிவுரை
பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பராமரிக்க வேண்டிய அறிவுரை
ADDED : பிப் 04, 2024 05:59 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 582 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், ஆய்வக உதவியாளர், ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிக்கும் பணியாளர்கள் உள்ளனர்.
மத்திய அரசின் அடல் டிங்கரிங் ஆய்வகங்களின் மூலமாக, ரோபோட், முப்பரிமாண அச்சுகளை உருவாக்குவதற்கு மற்றும் மாணவர்களின் அறிவினை பயன்படுத்தி, புதிய படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.
மெய்நிகர் வகுப்பறை மூலமாக, இணைய வழியில் கற்றல், கலந்தாலோசனை செய்வதற்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் பெரிதளவில் பயனுள்ளதாக இருக்கின்றன.
இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிர்-வேதியியல் ஆகிய அறிவியல் பாடங்களை சார்ந்த ஆய்வுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு அறிவியல் ஆய்வகங்கள் பெரிதளவில் உபயோகமாக உள்ளது.
கேட்டல், பேசுதல், படிதல், எழுதுதல் ஆகிய அடிப்படை கூறுகளை செயல்வழியாக கற்றுணர்வதற்கு, மொழியியல் ஆய்வகம் பயன்படுகிறது.
கணித கேட்பாடுகள், கணித சூத்திரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்கு கணித ஆய்வகங்கள் உதவுகின்றன.
தொழில் பாடங்களை கற்கும் போது, செய்துகாட்டுவதற்கு தொழில் ஆய்வகங்கள் உதவுகின்றன.
இதுபோன்ற ஆய்வகங்களுக்கு தலா ஒரு பணியிடம் என, மாணவ - -மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 50க்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர்கள் உள்ளனர்.
பெரும்பாலான அறிவியல், கணினி, தொழிற்கல்வி, மொழி ஆய்வக உதவியாளர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கணித, அறிவியல் உள்ளிட்ட ஆய்வகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தி இருப்பு பதிவேட்டில் இருப்பு வைக்க வேண்டும்.
செய்முறை தேர்வுக்கு ஏற்ப கரைசல்களை தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கப்பட வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.