புதுமை சிந்தனைகளை மாணவர்கள் வளர்க்க அறிவுரை: அணு விஞ்ஞானி
புதுமை சிந்தனைகளை மாணவர்கள் வளர்க்க அறிவுரை: அணு விஞ்ஞானி
ADDED : பிப் 28, 2026 06:08 AM

காஞ்சிபுரம்: 'அறிவியல் படிக்கும் மாணவ - மாணவியர் புதுமையான சிந்தனைகளை வளர்க்க வேண்டும்' என, வாலாஜாபாதில் அறிவியல் விழா மற்றும் கண்காட்சியில், சென்னை அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.
வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்த அறிவியல் விழா மற்றும் கண்காட்சிக்கு பள்ளி செயலர் சாந்தி தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் நளினி, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சென்னை அணு விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அறிவியல் விழா மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு மாணவ - மாணவியரின் அறிவியல் படைப்புகளை கேட்டறிந்தார். இதையடுத்து, அறிவியல் படிக்கும் மாணவர்கள் புதுமையான சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என, மாணவ - மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
பள்ளி தாளாளர் அஜய் குமார், முதல்வர் சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
