/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, ஆலோசனை கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 12, 2024 12:55 AM

காஞ்சிபுரம்,: வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, நேற்று ஆலோசனை கூட்டம் ஏனாத்துாரில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் பாபு தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி.,செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஓட்டுசாவடி முகவர்களுக்கு புதிதாக சேர்க்கப்பட்ட பெயர் பட்டியல், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் ஆகியவை கவனமாக பாருங்கள் என, ஆலோசனை வழங்கினார்.
வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.