/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுடன் ஆலோசனை
/
வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுடன் ஆலோசனை
ADDED : நவ 21, 2025 01:22 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுடன் பயிர் சாகுபடி குறித்து ஆலோசனை நடத்தினர்.
வேலுார் வி.ஐ.டி., வேளாண் கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் நேற்று, உத்திரமேரூர் பேரூராட்சி பகுதிகளுக்கு சென்றனர்.
ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் கீழ், பயிர்களில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
அதை தொடர்ந்து, உத்திரமேரூரில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் குறித்தும், மண் வளம் குறித்தும் விவசாயிகளிடம், மாணவர்கள் கேட்டறிந்தனர். பயிர் பருவங்கள் குறித்த அட்டவணையை விவசாயிகளுக்கு விளக்கினர்.

