/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அ.தி.மு.க., பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
/
அ.தி.மு.க., பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அ.தி.மு.க., பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அ.தி.மு.க., பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ADDED : ஜன 03, 2026 05:25 AM

பேரம்பாக்கம்: ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த, அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 71; அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர். இவர், கடந்த 30ம் தேதி வயலுக்கு சென்று விட்டு, ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் இருந்த வேகத்தடையில் ஸ்கூட்டர் ஏறி இறங்கும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தத்தில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, சென்னை வானகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.