/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுரகரேஸ்வரர் கோவிலில் அட்சயதிருதியை வழிபாடு
/
சுரகரேஸ்வரர் கோவிலில் அட்சயதிருதியை வழிபாடு
ADDED : ஏப் 30, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று குபேரனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அட்சய திருதியை தினமான நேற்று அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று காலை, 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, கூட்டு வழிபாடு, சங்கல்பம், மங்கல இசை நடந்தது. காலை 10:00 மணிக்கு மஹாதீப ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

