/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறப்பு தீவிர திருத்த முகாம் பற்றி காஞ்சியில் அனைத்து கட்சி கூட்டம் வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து விளக்கம்

ADDED : அக் 29, 2025 11:16 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் பற்றி, அனைத்து கட்சி கூட்டத்தில், அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர்.
காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்த முகாம், 2026 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு திருத்த முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தீவிர திருத்த முகாம் பற்றிய அனைத்து கட்சி கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், சிறப்பு தீவிர திருத்த முகாம் பற்றி பல்வேறு தகவல்களை கட்சியினருக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கும், அதிகாரிகள் பதில் அளித்தனர்.
மாவட்டத்தில் உள்ள 1,401 ஓட்டுச்சாவடி அலுவலர்களை கண்காணிக்க, 145 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாதம் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின், டிசம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
டிச.,9 முதல், ஜன., 8 வரை, வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கைகளும், ஆட்சேபனைகளும் பெறப்பட உள்ளன.
இந்த பணிகளை கண்காணிக்க எட்டு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க நான்கு துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.,7ல் வெளியிடப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் தற்போது 14.01 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக, அரசியல் கட்சியினருக்கு, மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.