/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புற்றுநோய் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு
/
புற்றுநோய் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு
புற்றுநோய் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு
புற்றுநோய் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 31, 2024 09:38 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகேயுள்ள காரைப்பேட்டையில் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதற்கு புதிதாக 750 படுக்கை வசதிகளுடன்கூடிய கட்டடம் கட்ட, முதற்கட்டமாக 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
மொத்தம், 220 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதி கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில், பொதுப்பணித் துறை வாயிலாக, சுற்றுச்சுவர், அலங்கார வளைவு உள்ளிட்டவைக்கு, 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு 30 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குவதற்கான கட்டடம் கட்ட 26 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.