/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சஞ்சீவராயர் கோவிலை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கீடு
/
காஞ்சி சஞ்சீவராயர் கோவிலை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கீடு
காஞ்சி சஞ்சீவராயர் கோவிலை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கீடு
காஞ்சி சஞ்சீவராயர் கோவிலை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 17, 2024 01:50 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு, கடந்தாண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருப்பணி துவங்கியுள்ளது. ஏற்கனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணியும், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 2 கோடியில் விடுதி கட்டுமான பணிகளும் துவங்கியுள்ளன.
மேலும், வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 2.8 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள சஞ்சீவராயர் கோவில் திருப்பணி மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத் துறை, 1.9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இக்கோவிலை சீரமைக்க வேண்டும் என, அய்யங்கார்குளம் கிராமத்தினரும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் பணிகள் நடப்பதால், விரைவில் பணிகள் துவங்க உள்ளன.

