/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவில் கோபுர சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
/
ஏகாம்பரநாதர் கோவில் கோபுர சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
ஏகாம்பரநாதர் கோவில் கோபுர சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
ஏகாம்பரநாதர் கோவில் கோபுர சீரமைப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
ADDED : நவ 09, 2024 10:03 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் முழுதும் திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக, 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவில் நிதி, உபயதாரர்கள் நிதி என பல்வேறு வகையான நிதி வாயிலாக, கோபுரம் சீரமைப்பு, 1,000 கால் மண்டபம் சீரமைப்பு, பிரகாரம் தரை சீரமைப்பு என பல வகையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவிலின் மேற்கு ராஜகோபுரம் சீரமைப்பு பணிக்காக, 1.98 கோடி ரூபாய், ஹிந்து சமய அறநிலையத் துறை வாயிலாக ஒதுக்கப்பட்டு, அப்பணிக்காக கோவில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்த பின், மேற்கு ராஜகோபுரம் சீரமைப்பு பணி நடைபெறும்.