/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சஞ்சீவிராயர் கோவிலுக்கு ரூ.2.46 கோடி ஒதுக்கீடு
/
சஞ்சீவிராயர் கோவிலுக்கு ரூ.2.46 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜன 05, 2025 07:33 PM
காஞ்சிபுரம்:ஹிந்து அறநிலையத் துறை சார்பில், தமிழகம் முழதும் 698 கோவில்களில், 250 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி மேற்கொள்ளப்படும் என, கடந்த 2023 ஏப்ரலில் நடந்த சட்டசபையில், அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
திருப்பணி நடைபெறும் கோவில்கள் பட்டியலில், காஞ்சிபுரம் அருகேயுள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவராயர் கோவிலும் அடங்கும். இக்கோவிலுக்கான திருப்பணி மேற்கொள்ள, காஞ்சிபுரம் தேவராஜஸ்வாமி கோவில் நிதியில் இருந்து, 2.09 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மேற்கொள்ள கடந்தாண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டது. ஆனால், டெண்டர் யாரும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை கமிஷனர், 2.50 கோடி ரூபாய்க்கு திருத்திய மதிப்பீடு செய்து, அரசுக்கு அனுப்பினார்.
அதை தொடர்ந்து, 2 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு திருப்பணி மேற்கொள்ள அரசாணை வெளியிட்டு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நிர்வாக அனுமதி பெற்று, டெண்டர் பணிகள் துவங்கப்பட உள்ளன.

