/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறநிலையத்துறை அலுவலகம் கட்ட ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு
/
அறநிலையத்துறை அலுவலகம் கட்ட ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு
அறநிலையத்துறை அலுவலகம் கட்ட ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு
அறநிலையத்துறை அலுவலகம் கட்ட ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 31, 2024 09:37 PM
காஞ்சிபுரம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின், காஞ்சிபுரம் இணை கமிஷனர் அலுவலகம், ரங்கசாமி குளம் அருகே தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
போதிய இட வசதியின்றி இயங்கி வரும் இக்கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டிய தேவை இருந்தது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் ஓணகாந்தீஸ்வரர் கோவில் இடத்தில், ஒருங்கிணைந்த இணை கமிஷனர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் முடிந்த நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு, 2.7 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிதாக கட்டப்பட உள்ள இடத்தில், இணை கமிஷனர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் இடம் பெற உள்ளன.