/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
/
உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜன 04, 2024 08:48 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 2023 - -24ம் நிதியாண்டுக்கான பொது நிதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், மேல்கட்டம்மன் கோவில் தெரு மற்றும் தோட்டக்கார தெருவில் சிறுபாலம்அமைத்தல், தாண்டவராய செட்டித்தெரு, எண்டத்துார் சாலை, மற்றும் பாவோடும் தோப்புத் தெருவில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், குப்பையநல்லுார் பகுதியில், மின்விசை மோட்டார் அமைத்தல், அண்ணா நகர் பகுதியில் சிறுபாலம்அமைத்தல் என, 11 வகையான வளர்ச்சி பணிகளுக்கு, 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில் டெண்டர் பணிகள் முடிந்தவுடன், இப்பணிகள் விரைவில் துவங்க உள்ளன.