ADDED : மே 04, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு போல, தனியார் பள்ளியைச்சேர்ந்த முன்னாள் மாணவியர் சந்திப்பு காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., முன்னாள் மாணவியர் சந்திப்பு கூட்டம் காஞ்சிபுரம் தனியார் பார்ட்டி ஹாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், 2006-2007ம் நிதி ஆண்டில் படித்த மாணவியர் பலர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
அனைத்து தரப்பு மாணவியரும் தங்களின் குடும்ப உறுப்பினர் மற்றும் தொழில் விபரங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டனர். மேலும், பள்ளி பருவ காலங்களை நினைவு கூறும் வகையில் திண்பண்டங்களை காட்சிப்பொருளாக வைத்திருந்தனர்.

