/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதாகி நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து
/
பழுதாகி நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து
ADDED : ஜன 24, 2025 01:29 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, நோயாளியை ஏற்றிக் கொண்டு ஊத்துக்கோட்டைக்கு சென்ற தனியார் ஆம்புலன்ஸ், நோயாளியை இறக்கிவிட்டு, அரக்கோணம் சாலையில் மீண்டும் தண்டலம் திரும்பியது.
அரக்கோணம் -- தண்டலம் சாலையில், வளர்புரம் அருகே வந்த போது, சாலை நடுவே பழுதாகி நின்றுக் கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில், ஆம்புலன்சின் முன்பக்கம் நொறுங்கியதில், ஆம்புலன்சை ஓட்டி வந்த மப்பேடு பகுதியைச் சேரந்த பிரசாந்த், 28, தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவ்வழியாக வந்தவர் அவரை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதனால், தண்டலம் -- அரக்கோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

