/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவ ஊர்தி சேவை அழைத்து பேரிடர் காலங்களில் பயன் பெறலாம்
/
மருத்துவ ஊர்தி சேவை அழைத்து பேரிடர் காலங்களில் பயன் பெறலாம்
மருத்துவ ஊர்தி சேவை அழைத்து பேரிடர் காலங்களில் பயன் பெறலாம்
மருத்துவ ஊர்தி சேவை அழைத்து பேரிடர் காலங்களில் பயன் பெறலாம்
ADDED : அக் 15, 2024 07:51 PM
காஞ்சிபுரம்:அவசரகால தேவைகளுக்கு, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை எண்ணை அழைத்து பயன் பெறலாம் என, கால்நடை துறை தெரிவித்து உள்ளது.
பேரிடர் காலங்களில், ஆடு, மாடுகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 45 குழுக்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், 63 குழுக்கள் என, 108 கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையிலான அவசர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர கால தேவைகளுக்கு, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை அழைப்பு எண்.1962 தொடர்பு கொண்டு, ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை பெறலாம்.
இதுதவிர, ஆடு, மாடுகளை மின் கம்பங்களின் அருகே கட்டுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் புகும் இடங்களில், ஆடு, மாடுகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், கொட்டகைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். நோய் தொற்று ஏற்படாமல் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஈரம் இல்லாத உலர் தீவனம் வழங்க வேண்டும்.
வெள்ளத்தில் சிக்கி ஆடு,மாடு இறக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவித்து, பிரேத பரிசோதனை செய்து, புதைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.